கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நியமனம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 3வது, 4வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தாமல் வெளிமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களைக்கொண்டு பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து உள்ளூர் மக்களுடன் கூடங்குள அணுமின் நிலைய அதிகாரிகள் இன்று சமாதானக் கூட்டம் இன்று நடத்தினர். இக்கூட்டத்தின் முடிவில், வெளிமாநில தொழிலாளர்களின் பணி நியமனம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அணுமின் நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com