காயத்துடன் தவிக்கும் யானை : கண்கலங்கும் கிராமம்

காயத்துடன் தவிக்கும் யானை : கண்கலங்கும் கிராமம்

காயத்துடன் தவிக்கும் யானை : கண்கலங்கும் கிராமம்
Published on

கோவை கொம்டனூர் மலை கிராமத்தில் ஆண் யானை ஒன்று காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் போரடி வருகிறது.

கொம்டனூர் மலை கிராமத்தில் ஆண் யானை ஒன்றிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாகப் போராடி வருகிறது. யானையின் இத்தகைய நிலையை கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர்.

மிகவும் சோர்வாக காணப்படும் இந்த யானைக்கு உடனடியாக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தகவலறிந்து பெரியநாயக்கன் பாளையம் பகுதிக்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.      

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com