மதகுகள் உடைந்த முக்கொம்பு அணை: பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு

மதகுகள் உடைந்த முக்கொம்பு அணை: பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு
மதகுகள் உடைந்த முக்கொம்பு அணை: பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு

 முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, அங்கு பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் இன்று ஆய்வு செய்கிறார்.

1836 ம் ஆண்டு ஆகிலேயர் காலத்தில் கட்டப்பட்டது முக்கொம்பு அணை. மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்பும் பகுதி முக்கொம்பு. 3 அணைகளில் இருந்தும் நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்றிரவு முக்கொம்பு அணையின் 45 மதகுகளில், 8 மதகுகள் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றுக்கு மேல் இருந்த பாலம் மற்றும் கைப்பிடிச் சுவரும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்தப் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. 

 திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். மதகுகள் அடித்து செல்லப்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஆட்சியர் தெரிவித்தார். அணையில் மதகுகள் உடைந்ததை பார்வையிட பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் இன்று வரவுள்ளார். 

தற்போது முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதில் 32 ஆயிரம் கன அடி நீர் காவிரிக்கும், 8 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திற்கும் பிரித்து விடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com