மந்த நிலையில் தமிழகத்தின் நிதி நிலை - வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?

மந்த நிலையில் தமிழகத்தின் நிதி நிலை - வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?
மந்த நிலையில் தமிழகத்தின் நிதி நிலை - வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?

கடந்த 2011-12ம் ஆண்டில் உச்சநிலையிலிருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மந்த நிலையில் இருக்கிறது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2013-14ம் ஆண்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கையின் தகவலின்படி, ''2006-13ம் காலக்கட்டத்துக்குள்ளான 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு வருவாய் உபரியை அடைந்திருக்கிறது. 2013ம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. 2020-21ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை 61, 320 கோடி ரூபாயாகும். இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.16 சதவீதமாகும்.

2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சராசரி வருவாய் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதமாக இருந்தபோது, தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை முறையே 1.5 சதவீதமாகவும்,1.4 சதவீதமாகவும் இருந்தது.

2016-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான நிதிப் பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாகும். இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.43சதவீதமாகும். 2016-2021ம் ஆண்டு காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் வருவாய்ப் பற்றாக்குறை விகிதம் 52.48 சதவீதமாகும். இவ்விகிதம் 2011-16 காலகட்டத்தில் 14.94 சதவீதமாக இருந்தது'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த கடன்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2,63,976 ரூபாய் பொதுக்கடன் சுமத்தப்படுகிறது. 2021-22ன் இடைக்கால வரவு-செலவுத்திட்ட மதிப்பீட்டின்படி, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும்.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொதுக்கடன் விகிதம் 26.69 சதவீதமாகும்.2006ம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொதுக்கடனின் விகிதம் 18.37 சதவீதமாக இருந்தது.

ஒவ்வொரு மாநிலமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொதுக்கடனின் விகிதத்தை 2003-2019க்கு இடையில் குறைந்துள்ளது. 2012வரை இந்த விகிதம் 26 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக குறைத்து தமிழகமும் இந்த போக்கை பின்பற்றி வந்தது. ஆனால், அதன் பிறகு இந்த நிலை மோசமடைய தொடங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com