போக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து !

போக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து !
போக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து !

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க அதிநவீன வசதிகள் கொண்ட புதிய இ-சலான் இயந்திரங்கள் சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

சென்னையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று டிராபிக். பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் வாகன ஓட்டிகள் அதனை சரியாக மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமும், மறுபுறம் போக்குவரத்து விதிமீறல்களாள் விபத்து அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்ககளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும்போது, போக்குவரத்து போலீசார் சம்பந்தபட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், அபராதம் வசூலிக்கும் வகையிலும் நவீன வசதிகள் கொண்ட இயந்திரங்களை ஆங்காங்கே போக்குவரத்து காவலர்கள் பயன்படுத்துகின்றனர். 

இந்நிலையில் இன்று அதிநவீன வசதிகள் கொண்ட 352 புதிய இ-சலான் இயந்திரங்கள் சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் ஆண்ட்ராய்டு சேவையிலிருந்து, விண்டோஸ் அப்ளிகேஷன் வரை அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த இயந்திரம்,ஆர்.டி.ஓ அலுவலகங்களோடு இணைக்கப்பட்டிருப்பதால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவலர்கள் நேரடியாக பரிந்துரைக்கும் வசதியுள்ளதாக  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2018 ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு மே மாதம் வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 904 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள அதிநவீன இ- செலான் இயந்திரங்களில், தேசிய அளவிலான வாகனங்கள், அதன் குற்றப்பின்னணிகுறித்த தகவல்களும் பதிவேற்றப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும், GCTP CITIZEN SERVICES என்ற மொபைல் அப்ளிகேஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே படம்பிடித்து, புகார் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சிக்னல் கோளாறு தொடர்பான புகார்களையும் இந்த மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com