திடீரென பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுனர்.. சாலையில் மறியல் செய்த மாணவர்கள்-ஆரணியில் பரபரப்பு

திடீரென பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுனர்.. சாலையில் மறியல் செய்த மாணவர்கள்-ஆரணியில் பரபரப்பு
திடீரென பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுனர்.. சாலையில் மறியல் செய்த மாணவர்கள்-ஆரணியில் பரபரப்பு

செய்யாறு ஆரணி சாலையில் கூடுதல் பயணிகள் ஏறியதால் ஓட்டுனர் பேருந்தை இயக்க மறுத்தார். அப்போது, பேருந்திலிருந்த மாணவர்கள் ஓட்டுநனருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் இறங்கி கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இரண்டு ஷிப்டுகளில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு சென்று பயின்று வருகின்றனர். இதில் பெரும்பாலும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் செய்யாறு, ஆரணி சேத்துப்பட்டு போளூர் வந்தவாசி காஞ்சிபுரம் ஆற்காடு உள்ளிட்ட பகுதியிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்தை நம்பியே தினமும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அதிக மாணவர்கள் வந்து செல்லும் செய்யாறு ஆரணி சாலையில் மாலையில் சுமார் ஆறு பேருந்துகள் வரை அடுத்தடுத்து இயக்கப்பட்டாலும் பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்திலும் 150 லிருந்து 200 மாணவர்கள் தினமும் வந்து செல்வதால் பேருந்து படிக்கட்டுகளிலும் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு கல்லூரிக்களுக்கும் பள்ளிக்களுக்கும் சென்று வந்து பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மாலை ஆரணி மாம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் பயணிகள் இருந்ததால் பேருந்து இயக்க மறுத்த ஓட்டுனர் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு அமைதியாக காத்திருந்தார். பின்னர் அதிலிருந்து மாணவர்கள் சாலையில் சுமார் அரை மணி நேரம் நின்று அவ்வழியாக வரும் பேருந்துகளில் ஒரு சில மாணவர்கள் ஏறி தொற்றி கொண்டு சென்றனர். பின்னர் கூடுதல் மாணவர்கள் நின்றிருந்ததால் பேருந்து ஓட்டுனர் இயக்க மறுத்தார்.

பின்னர் போக்குவரத்து கிளை மேலாளர்  மற்றும்  ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு மாணவர்கள் அதில் பயணித்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் ஆரணி சாலையில் மாணவர்கள் சாலையில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com