பேருந்தில் நடந்த தகராறு.. சொந்த ஊரில் வழிமறித்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்!

பேருந்தில் நடந்த தகராறு.. சொந்த ஊரில் வழிமறித்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்!

பேருந்தில் நடந்த தகராறு.. சொந்த ஊரில் வழிமறித்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்!
Published on

சொந்த ஊரில் தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்க முயன்றுள்ளார் பயணி ஒருவர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இன்று மதியம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் தனியார் பேருந்தில் மளிகை சரக்குகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து நடத்துனரிடம் மாதனூர் பகுதியில் இறங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் மாதனூரில் பேருந்து நிற்காது எனக்கூறி ரஞ்சித்தை ஆபாசமாக திட்டியும் தாக்கியும் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித் அதிவேகமாக மாதனூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் மாதனூர் பகுதியில் தனியார் பேருந்து வந்தபொழுது பேருந்தை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வழிமறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கற்களால் தாக்கமுற்பட்டார். பின்னர் மாதனூர் பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்கள் இருவர்களிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு சமரசம் செய்து தனியார் பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் மாதனூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com