நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம் கெரடாலீஸ் கிராம அங்கன்வாடி மையத்தில் கதவை உடைத்து இன்று காலை கரடி நுழைந்தது.
பின்னர், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சத்துமாவை கரடி சாப்பிட்டும், மிதித்தும் வீணாக்கியது. அதனை பார்த்த கிராம மக்கள், கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் கரடி வராமல் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.