கோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி

கோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி

கோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி

கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவர்களின் ஆடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் செல்லும் புகைப்படம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக முழுமையாக மாற்றப்பட்டது. அங்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து கோவையைச் சுற்றி மற்ற  மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையை தொடர்ந்து மிகப்பெரிய வணிக வளாகமான அவினாசி சாலையில் கொடிசியா வணிக வளாகத்தில் உள்ள டி ஹாலானது தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு முதற்கட்டமாக 200 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 200 நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த மையத்தில் மருத்துவர்கள் பயன்படுத்திய ஆடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச்செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


இதன் மூலம் தொற்று அதிகரிப்பதுடன், மற்ற தெரு நாய்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் படமானது சுகாதார ஊழியர்களின் அலட்சியத் தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகாரிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது “புகைப்படத்தில் காணப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அந்த ஆடையை தூக்கி எரிந்ததாகவும், அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும்” விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com