தமிழ்நாடு
”வெள்ள பாதிப்புகளை திமுக அரசு சரியாக கையாளவில்லை” - ஜெயக்குமார்
"எங்க ஆட்சியில் பெய்த மழையை விட இப்பொழுது பெய்த மழை 50% விகிதம் தான். ஆனால் இந்த ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை" என்கிறார் ஜெயக்குமார்
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையை வானிலை ஆய்வுமையம் ஐந்து நாட்களுக்கு முன்பே தமிழக அரசிடம் சொன்னதாகவும், அதிநவீன ராடர்களை மாநில அரசிடம் கொடுத்தும் அவர்கள் அதை சரியாக உபயோகிக்காததால், வெள்ளத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது குறித்து, முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபொழுது, "எங்க ஆட்சியில் பெய்த மழையை விட இப்பொழுது பெய்த மழை 50% விகிதம் தான். ஆனால் இந்த ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்கிறார்." இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கலாம்