சிதம்பரம் நடராஜ கோயில் ஆருத்ரா தரிசனம்: வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

சிதம்பரம் நடராஜ கோயில் ஆருத்ரா தரிசனம்: வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

சிதம்பரம் நடராஜ கோயில் ஆருத்ரா தரிசனம்: வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
Published on

சிதம்பரம் நடராஜ கோயிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்கள் அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளியூர் பக்தர்களை நகரத்தின் வெளியே தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிலையில், டிசம்பர் 29ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்காக ஆயிரம் நபர்களும், ஆருத்ரா தரிசனத்திற்கு ஒரே நேரத்தில் 200 நபர்களும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் தங்கும் விடுதிகளிலும் வெளியூர் பக்தர்கள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com