சிறையிலுள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள்? - டிடியில் உள்ள பெயர்கள் விவரம்

சிறையிலுள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள்? - டிடியில் உள்ள பெயர்கள் விவரம்
சிறையிலுள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள்? - டிடியில் உள்ள பெயர்கள் விவரம்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் வரும் ஜனவரி 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரான முத்துக்குமார் ரூ. 10.10 கோடியை வரைவோலைகளாக செலுத்தினார். இதனால் சசிகலா தண்டனை காலம் முடிந்து ஜனவரியில் வெளியே வருவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது. வசந்தா தேவி என்பவர் பெயரில் ரூ.3.75 கோடிக்கு வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வழங்கியுள்ளார். விவேக் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com