கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டம் இம்மாதம் தொடக்கம்

கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டம் இம்மாதம் தொடக்கம்

கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டம் இம்மாதம் தொடக்கம்
Published on
ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஜந்து ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கான பணியை இம்மாதம் கால்நடைத் துறை துவக்குகிறது.
ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஜந்து செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என கால்நடை துறை சார்பில் மானிய கோரிக்கையின் போது சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 75.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 38,800 பேருக்கு தலா ஐந்து ஆடுகள் வழங்கபட உள்ளன. இம்மாதம் 15க்குள் இதற்கான பணியை துவக்க கால்நடை துறை தயாராகி உள்ளது.
முதற்கட்டமாக ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 100 பெண்கள் என்ற அடிப்படையில், 388 பஞ்சாயத்து யூனியன் முழுவதும், அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதத்துக்குள் பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக மாவட்ட வாரியாக ஆட்சியர் தலைமையிலான குழு, இந்த பணியை மேற்கொள்ள உள்ளது. அதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் துவங்கி ஜனவரிக்குள் பயனாளிகள் அனைவருக்கும் ஆடுகள் வழங்க முடிவு செய்து உள்ளதாக, கால்நடை துறை அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com