தமிழ்நாடு
”இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஆனால் இறப்பு வீதம்...” - சுகாதாரத்துறை செயலாளர்
”இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஆனால் இறப்பு வீதம்...” - சுகாதாரத்துறை செயலாளர்
மக்கள் தயவு செய்து முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, கொரோனா பரவலை தடுக்க தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். அரசியல் தலைவர்கள், அவர்களின் தொண்டர்களை முகக்கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும். போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்கள்.
மதக்கூட்டம், உள் அரங்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவுகிறது. கொரோனா இறப்பு இல்லாத இறப்பு நிகழ்வுகளிலும் கொரோனா பரவுகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்பு வீதம் குறைந்துள்ளது” என்று கூறினார்