செல்ஃபி மோகத்தால் விபரீதம்: நீரில் விழுந்த மாணவன் பலி

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: நீரில் விழுந்த மாணவன் பலி

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: நீரில் விழுந்த மாணவன் பலி
Published on

சென்னையில் செல்ஃபி மோகத்தால் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ஏரியில் செல்பி எடுக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாபிராம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரின் மகன் சந்தோஷ். திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த போது தண்டுரை ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏரி செல்ஃபி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைத்தடுமாறி ஏரிக்குள் விழுந்த சந்தோஷ் நீரில் மூழ்கி உ‌யிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com