\
அண்ணன் வாங்கிய கடனுக்காக அடகு வைக்கப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

அண்ணன் வாங்கிய கடனுக்காக அடகு வைக்கப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

அண்ணன் வாங்கிய கடனுக்காக அடகு வைக்கப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை
Published on

அண்ணன் வாங்கிய கடனுக்காக அடகு வைக்கப்பட்ட 12 வயது சிறுவன். அடித்து துன்புறுத்தப்பட்டு கொத்தடிமையாக கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அச்சிறுவனை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 12 வயது சிறுவனுக்கு, அவரது அண்ணனும், அண்ணியும் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுவனின் அண்ணன் சுப்பிரமணியும், அண்ணி மாரியம்மாளும், தனியார் குடியிருப்புகளில் கழிப்பிடம் சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர் சின்னராசு மற்றும் அவரது தாயார் வள்ளியிடம் ரூ. 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அச்சிறுவனை அடகு வைத்துவிட்டனர்.

சிறுவன் கடந்த 3 வருடங்களாக உழைத்து ஒரு லட்சம் ரூபாய் கடனை அடைத்து விட்டார். மேலும் 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடிமையாக வேலைபார்த்து வந்துள்ளான். அச்சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சிறுவனை அடித்து சித்திரவதை செய்து வேலைவாங்கி வந்தவர்கள் மீது புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com