திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது  நீதிமன்றம்!

திருத்தணிகாசலம் தொடர்ந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டார் திருத்தணிகாசலம். இதனை அடுத்து அவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார். புகாரை அடுத்து திருத்தணிகாசலம் மே 6ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மனு தொடர்ந்தார்.மனு குறித்த விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து திருத்தணிகாசலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் திருத்தணிகாசலம் தொடர்ந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் திருத்தணிகாசலம் தொடர்ந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com