இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகளிடம் விசாரிக்க 5 நாட்கள் அனுமதி

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகளிடம் விசாரிக்க 5 நாட்கள் அனுமதி
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகளிடம் விசாரிக்க 5 நாட்கள் அனுமதி

பெங்களூரில் கைது செய்யப்பட்டு கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி உட்பட இருவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இலங்கையின் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா, கோவை சேரன் மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் வசித்து வந்தவர், கடந்த 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று மதுரையில் தகனம் செய்தனர்.

இந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தனர்.

இந்நிலையில், அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்ததாக இலங்கை, அதுரகிரியாவைச் சேர்ந்த சனுக்கா தனநாயகா (38), அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபால கிருஷ்ணன ஆகியோரை டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த 12ஆம் தேதி கைது செய்து அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் 7 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், 5 நாட்கள் அனுமதி அளித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com