குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், இவருக்கு வயது 35. இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விஜயா (27) என்பவருடன் சசிகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் சென்னையை அடுத்த நாவலூரில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணம் நடந்த இரண்டு வருடம் ஆகியும் குழந்தை ஏதும் இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் மன உளைச்சலில் தம்பதியினர் இருந்துள்ளனர். இதன் காரணமாக கணவன் - மனைவி இருவரும் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தத் தற்கொலை குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து போலீசார் பிரேதங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.