\
கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்
Published on
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தை பூங்காவாக மாற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னையை அழகுபடுத்தும் முயற்சியாக, சுவரொட்டிகளை அகற்றி, ஓவியங்கள் வரைவது, வண்ண விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தை, தனியார் பங்களிப்புடன் பூங்காவாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. செயற்கை நீரூற்று, அலங்கார விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. விரைவில் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com