\
இனி வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால் கட்டணம் - கோவை மாநகராட்சி

இனி வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால் கட்டணம் - கோவை மாநகராட்சி

இனி வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால் கட்டணம் - கோவை மாநகராட்சி
Published on

கோவையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கான கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட 30 சாலைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்த சாலைகளின் ஓரம் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் ஆகும். மேலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வாகன நிறுத்த கட்டண நிர்ணயத்துக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com