சென்னை மாநகராட்சியால் கொண்டுவரப்பட்ட இ டாய்லெட் திட்டம் தற்போது முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு மாற்று என்ன? என்பது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
இ டாய்லெட் திட்டம் இனிமே சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்படாது. இதைத்தான் மாநகராட்சி துணை மேயர் சொல்லியிருக்கிறார். அதற்கு மாற்றாக, ஒப்பனை அறை கட்டி வருவதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒப்பனை அறை அதிகமாக கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இ- டாய்லெட் திட்டம்
2015-ஆம் ஆண்டு தொடக்கம் தூய்மை இந்தியா திட்டத்தில் கொண்டுவரப்பட்டது. சென்னையில் 204 இடங்களில் அமைக்கப்பட்ட இ- டாய்லெட் ஒன்றின் செலவு ரூ.5 லட்சம் .
சென்னையில் முற்றிலும் செயலிழந்துவிட்ட இ- டாய்லெட் திட்டம் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக்வும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.