முழுமையான எழுத்தாளர் பிரபஞ்சன் மட்டுமே: மிஷ்கின் பெருமை

முழுமையான எழுத்தாளர் பிரபஞ்சன் மட்டுமே: மிஷ்கின் பெருமை
முழுமையான எழுத்தாளர் பிரபஞ்சன் மட்டுமே: மிஷ்கின் பெருமை

நான் சந்தித்த மிக முழுமையான எழுத்தாளர் பிரபஞ்சன் மட்டுமே என்று இயக்குனர் மிஷ்கின் கூறினார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த 55 வருடங்களாக எழுதி வருகிறார். அவருக்கு பாராட்டு விழாவும் நிதியுதவி அளிக்கும் விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பிரபஞ்சனுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. விழாவில் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, இயக்குனர் மிஷ்கின், நடிகர் சிவகுமார், ஓவியர் மணியம் செல்வம், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், பவா.செல்லத்துரை, டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது: ‘நான் டால்ஸ்டாயைப் பார்த்ததில்லை, அவர் மகன் ஆன்டன் செக்கோவை பார்த்ததில்லை. அவன் தமயன் தஸ்தாயெவ்கியை பார்த்ததில்லை. அவர் பேரன் சிங்யூ சைத்மேத்யூனை பார்த்ததில்லை. நான் பிரபஞ்சனைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் படித்திருக்கிறேன். ஆனால், பிரஞ்பஞ்சனோடு வாழ்ந்திருக்கிறேன். அவர்களை படித்து லயித்திருக்கிறேன். ஆனால், பிரபஞ்சனோடு குடித்து அழுதிருக்கிறேன். நான் குடித்தவர்களிலேயே மிகப்பெரிய இலக்கியவாதி பிரபஞ்சன். நான் குடிப்பதை இலக்கியமாக்கியவன் என் பிரபஞ்சன். நான் குடிக்கும் போதெல்லாம் ஹைக்கூ பேச வைத்தவன் என் பிரபஞ்சன். பேப்பரில் எழுத வைத்தவன். ஏதாவது ஒரு ஹைக்கூவைச் சொன்னால், பிரபஞ்சன் மட்டும்தான் சொல்வார், இப்படி யாருமே சிந்திக்கலையே என்று. இப்படி மூன்று நாள் குடித்து உளறியிருக்கிறோம். அப்படி உளறியதை’நத்தை போன பாதைகள்’என்ற புத்தகமாக உருவாக்கினோம்.

நான் சந்தித்த மிக முழுமையான எழுத்தாளர், வாழும் பொக்கிஷம் பிரபஞ்சன். அவருக்கு கோபம் வந்தால் இரண்டு வருடம் மன்னிக்கமாட்டார். போடா என்று சொல்லிவிடுவார். அவர் அப்படி பல பேரை விரட்டியிருக்கார். அதுல நானும் ஒருத்தன். அதுக்குப் பிறகு அதை மறந்து அணைத்துக்கொள்வார்.

இலக்கியவாதி மட்டும்தான் இலக்கியம் போல் வாழ முடியும். அப்படி வாழ்பவர் என் பிரபஞ்சன். நான் பார்த்த, இலக்கியவாதிகளில் தலைநிமிர்ந்து நடப்பவர் பிரபஞ்சன் மட்டும்தான். ஒரு குழந்தையின் சிரிப்பை போல் என்னுடன் அவர் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த உலகத்துக்கு அவர் கொடுத்த ஒரு டைட்டில் போதும். ’வானம் வசப்படும்’ என்ன மாதிரியான டைட்டில். அவரைப் பத்திரமாக பார்த்துக்கொள்வோம்.

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com