ஜெயலலிதா உடனிருந்த மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன்
ஜெயலலிதா ஆடியோ பதிவு செய்தபோது உடனிருந்த அர்ச்சனா உட்பட 4 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நேரத்தில் ஆடியோ பதிவு செய்யப்பட்ட போது உடனிருந்த அப்போலோ மருத்துவர் அர்ச்சனா உட்பட 4 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி மருத்துவர் அர்ச்சனா, செவிலியர் ரேணுகா ஆகியோர் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 6ஆம் தேதி அப்போலோ மருத்துவர் பிரசன்னா, செவிலியர் ஷீலா ஆகியோரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சசிகலாவின் உதவியாளரான கார்த்திகேயனிடம் ஆறுமுகசாமி ஆணையம் மறுவிசாரணை நடத்தியது. மேலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அப்போது முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.