\
முசிறியில் ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை உயிரிழப்பு

முசிறியில் ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை உயிரிழப்பு

முசிறியில் ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை உயிரிழப்பு
Published on

முசிறி அருகே வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஜூஸ் என நினைத்து குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

முசிறி தாலுகா காமாட்சி பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் - சுகன்யா தம்பதிக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜீவா வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த மண்ணெண்ணையை ஜூஸ் என நினைத்து குடித்துள்ளான்.

இதனைக் கண்டு பதறிய தாய் சுகன்யா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ் காந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com