\
சாலையில் மணக்கோலத்தில் நின்ற மணமக்கள்: காரை நிறுத்திவிட்டு வாழ்த்திய முதல்வர்

சாலையில் மணக்கோலத்தில் நின்ற மணமக்கள்: காரை நிறுத்திவிட்டு வாழ்த்திய முதல்வர்

சாலையில் மணக்கோலத்தில் நின்ற மணமக்கள்: காரை நிறுத்திவிட்டு வாழ்த்திய முதல்வர்
Published on

திருக்குவளை செல்லும் வழியில் திருமணக் கோலத்தில் நின்றிருந்த மணமக்களை ஸ்வீட் சர்ப்பரைஸாக காரிலிருந்து இறங்கி முதல்வர் மு.க ஸ்டலின் வாழ்த்தியதோடு திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார்.

இன்று திருக்குவளை அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருக்குவளை சென்றுள்ளார். திருக்குவளை செல்லும் வழியில் பின்னவாசல் அருகே திருமண மண்டப வாசலில் மணக்கோலத்தில் மணமக்கள் நின்றிருந்ததைப் பார்த்தவர், காரை நிறுத்திவிட்டு மணமக்களுக்கு அருகே சென்று வாழ்த்தியதோடு திருமணத்தையும் நடத்தி வைத்தார். இந்த எதிர்பாராத ஸ்வீட் சர்ப்ரைஸால் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போயுள்ளனர் மணமக்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com