\
திண்டுக்கல்லில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஜல்லிக்கட்டு..?

திண்டுக்கல்லில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஜல்லிக்கட்டு..?

திண்டுக்கல்லில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஜல்லிக்கட்டு..?
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் இன்று காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கிவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. மேலும் அலங்காநல்லூரில் இன்று காலை 10 மணிக்கு தாமே ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைக்க இருப்பதாகவும், மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைப்பார்கள் என்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

ஆனால் போராட்டகாரர்கள் தங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் வேண்டாம் எனவும் நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் அலங்காநல்லூர் செல்லும் அனைத்து வழிகளையும் போராட்டக்காரர்கள் தடுப்பு அமைத்து அடைத்து வைத்துள்ளனர். காளைகளையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எனவே அலங்காநல்லூரில் முதலமைச்சர் துவங்கி வைப்பதாக இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு கேள்விகுறியாகி உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் இன்று காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கிவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com