வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் அடையாறு, மத்திய கைலாஷ், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.

பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகன போக்குவரத்தில்  மாற்றங்கள் சோதனை அடிப்படையில் வரும் நாளை (ஜூன் 04) முதல் 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் ஜூன் 04 முதல் ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி சர்தார் பட்டேல் சாலையை அடைந்து காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் யூடர்ன் திரும்பி மீண்டும் சர்தார் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடைந்து அவரவர் இலக்கை அடையலாம்.

அல்லது பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகர் 2வது அவின்யூ (வாட்டர் டேங்க் சாலை) இந்திரா நகர் 1வது அவின்யூ சந்திப்பு வழியாக எல்.பி.ரோட்டை அடையலாம்.

அதேபோல் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியாக ஏற்கனவே அண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டும் மற்றும் அண்ணாசாலை - திரு.வி.க சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகன ஓட்டிகளின் வரவேற்பை பெற்றுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக  அண்ணாசாலை சுமித் ரோடு சந்திப்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு 10 நாட்கள் சோதனை முயற்சியாக 04.06.2022 தேதி முதல் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
 
தற்போது ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பட்டுலாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். மேலும் ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம். காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமான நேரங்களில் ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியாக வரும் 04.06.2022 தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளது

ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் மற்றும் டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைய அனுமதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் ரோட்டிற்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணி கடை எதிரே யூடர்ன் செய்து ஸ்பென்சர் சந்திப்பு நோக்கி செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மற்றும் வாகன ஓட்டிகளின் கருத்துக்களையும்,  கோரிக்கைகளையும் தொலைபேசி மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: திருட்டு வாகனத்தில் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற இளைஞர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com