தமிழ்நாடு
பெயரில்லாமல் காணப்படும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம்
பெயரில்லாமல் காணப்படும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம்
சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படகூடிய காவல் ஆணையர் அலுவலகம் தற்போது சரியான பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை வேப்பேரியில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா புதிய காவல் ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 8 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு அலுவலகம், மக்கள் குறைதீர் மையம், காவல் அதிகாரிகள் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகவே செயல்படும்.
சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படகூடிய காவல் ஆணையர் அலுவலகம் தற்போது சரியான பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது. காவல் ஆணையர் அலுவலகத்தின் பெயர் பலகை பராமரிப்பின்றி உடைந்து காணப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் தினமும் காந்தி இர்வின் பாலம் வழியாக காரில் வந்து காவல் அலுவலகத்திற்குள் செல்வது வழக்கம். அப்போது ஒருமுறைக்கூட உடைந்த பெயர்பலகையை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக ஏராளமான பொதுமக்கள் பணிக்காக வாகனங்களில் செல்லும் போது அரசு அலுவலகம் பெயரின்றி காணப்படுவதை கண்டு செல்லும் நிகழ்வாக இருக்கிறது.