\
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Published on

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com