தணிக்கைத்துறை அறிக்கை : அரசுக்கு இவ்வளவு நஷ்டமா ?

தணிக்கைத்துறை அறிக்கை : அரசுக்கு இவ்வளவு நஷ்டமா ?
தணிக்கைத்துறை அறிக்கை :  அரசுக்கு இவ்வளவு நஷ்டமா ?

சென்னையில் 23 சதவிகித அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 49 சதவிகிதம் ஆக்கிரமிப்பில் உள்ளதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2016 17 நிதியாண்டில் மின்சாரத்துறையில் அனல்மின் நிலையங்களுக்கு கொள்முதல் செய்யும் நிலக்கரிக்கென தனி கொள்கை இல்லாத காரணத்தால் 745 கோடி ரூபாய் இழப்பு . 2016 17 நிதியாண்டில் மின்வாரியம், 8 அரசு போக்குவரத்து கழகங்கள் உட்பட 25 பொது  நிறுவனங்கள் 9366 கோடி நஷ்டத்தில் இயங்கியுள்ளது.

பத்திரப்பதிவுத்துறையில் முத்திரைத்தாள் கட்டணங்கள் சரிவர நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டுகளில் 946 கோடி ரூபாய் இழப்பு.  2013 ஏப்ரல் முதல் 2015 மார்ச் வரை பெட்ரோல் டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை சரிவர வசூலிக்காத காரணத்தால் 1893 கோடி ரூபாய் வருவாய் இழக்கப்பட்டிருக்கிறது. ராஜவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள் வாங்கப்பபட்டு அதை பயன்படுத்தாத வகையில் 16 கோடி ரூபாய் இழப்பு. புதிய அரசுப்பேருந்துகளை கொடியசைத்து  தொடங்கிவைக்க முதலமைச்சரின் நேரம் கிடைக்காத காரணத்தால் அரசுக்கு14 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 2020 அரசுப் பேருந்துகளை பச்சை கொடியசைத்து தொடங்கி வைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரத்திற்காக காத்திருந்த காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பேருந்து கூடு கட்டப்பட்டு எந்த வித பயன்பாடும் இல்லாமல் 1.5 ஆண்டுகள் முதல்வர் நேரத்திற்கு காத்திருந்ததும் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com