“காவிரி ஆணையம் இடையூறின்றி செயல்படும்” - தம்பிதுரை

“காவிரி ஆணையம் இடையூறின்றி செயல்படும்” - தம்பிதுரை

“காவிரி ஆணையம் இடையூறின்றி செயல்படும்” - தம்பிதுரை
Published on

காவிரி மேலாண்மை‌ ஆணையம் எந்த இடையூறு இன்றி செயல்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரூர் அருகே நத்தம்மேடு ஓடையில் தடுப்பணைக் கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேட்டியளித்த அவர், மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடப்பாடி அரசு செய்து வருவதாக தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக, புதுச்சேரி மாநில உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் தலைவர் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆணையம் செயல்பட தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

ஜூன் 12-ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக கூறிய தம்பிதுரை, தண்ணீர் கிடைத்தவுடன் மேட்டூர் ‌அணை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். காவிரி நீர் தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் அதிமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் மேலாண்மை வாரிய உறுப்பினர்களை கர்நாடகம் விரைவில் அறிவிக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com