200 மீட்டர் உயரத்திற்கு பறந்து வந்து கீழே விழுந்த கார் - பதறிப்போன பொது மக்கள்

200 மீட்டர் உயரத்திற்கு பறந்து வந்து கீழே விழுந்த கார் - பதறிப்போன பொது மக்கள்

200 மீட்டர் உயரத்திற்கு பறந்து வந்து கீழே விழுந்த கார் - பதறிப்போன பொது மக்கள்
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கார் ஒன்று 200 மீட்டர் உயரத்திற்கு பறந்து வந்து கீழே விழுந்ததால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அது திரைப்பட ஷூட்டிங் என தெரியவந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தில் திரைப்பட ஷூட்டிங் களைகட்டியுள்ளது. தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகர்ஜுனா நடிக்கும் தெலுங்கு படத்தின் ஷூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் உயரத்திற்கு பறந்து வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்தது. அதைப்பார்த்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அது திரைப்படத்திற்கான சண்டைக் காட்சி என தெரியவந்ததால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையும் படிக்க: நீலகிரி: வனத்தில் நிலவும் வறட்சி - ஊருக்குள் உலாவந்த காட்டு யானை கூட்டம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com