\
பழனி அருகே மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - ஒருவர் பரிதாப உயிரிழப்பு

பழனி அருகே மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - ஒருவர் பரிதாப உயிரிழப்பு

பழனி அருகே மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - ஒருவர் பரிதாப உயிரிழப்பு
Published on

பழனி அருகே சாலையோர மின்கம்பத்தில் மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் சென்றவர் தீயில் கருகி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி தாராபுரம் சாலையில் வாகரை என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மின்கம்பத்தில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து காரில் பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பரவியுள்ளது.

உடனடியாக தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த உடுமலை பாலப்பம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் தீயில் கருகி பலியாகினர். இதுகுறித்து, கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com