"மதுபாட்டில் சின்னம் வேண்டும்" - கழுத்தில் தாலியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்!

"மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும், மதுபாட்டில், டம்ளர், செருப்பு இதில் ஏதாவது ஒன்றைச் சின்னமாக ஒதுக்க வேண்டும்" என நூதன முறையில் வேட்பாளர் ஒருவர் கோரிக்கை வைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த ஆறுமுகம்
வேட்புமனு தாக்கல் செய்த ஆறுமுகம் PT WEB

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகம் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கழுத்தில் தாலியுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பக்தி கூட்டணி, பகுத்தறிவு கூட்டணி மற்றும் தங்களது பார் கூட்டணிக்கும் தான் போட்டி நிலவுகிறது. மத்திய அரசு தான் மதுபான தயாரிப்பு ஆலைக்கு அனுமதி வழங்குகிறது. அதனால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இனி கடல் நீரில் மது தயாரிக்க வேண்டும். இளம் விதவைகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மதுபான கடைகளில் குடிநீர் டேங்க் வைக்க வேண்டும். மதுவினால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஜீவனாம்சம், இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். அனைத்து வகை மது பாட்டில்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தங்களுக்கு மதுபாட்டில், டம்ளர், செருப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சின்னமாக ஒதுக்க வேண்டும்" எனக் கோரிக்கைகளை வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com