சீறிப்பாய்ந்த காளைகள்; சினம் கொண்டு அடக்கிய காளையர் - இது பாலக்கோடு மஞ்சு விரட்டு

சீறிப்பாய்ந்த காளைகள்; சினம் கொண்டு அடக்கிய காளையர் - இது பாலக்கோடு மஞ்சு விரட்டு
சீறிப்பாய்ந்த காளைகள்; சினம் கொண்டு அடக்கிய காளையர் - இது பாலக்கோடு மஞ்சு விரட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலக்கோடு அருகே பெலமாரனஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெலமாரனஹள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து மஞ்சு விரட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சீரியம்பட்டி, பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை பாலக்கோடு, மாரண்டஅள்ளி, இராயக்கோட்டை, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோபூஜை செய்து ஒவ்வொரு காளையாக ஓடவிட்டனர்.

தொடர்ந்து சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு காளையை அடக்க விரட்டிச் சென்றனர். மேலும் சிறப்பாக ஆடிய காளைகள் மற்றும், இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தடுக்க மாரண்டஹள்ளி காவல் துறையினர் பாதிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த மஞ்சு விரட்டு போட்டியை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com