மோட்டார் ரூமில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மோட்டார் ரூமில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மோட்டார் ரூமில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
Published on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பந்தை எடுக்க சென்ற மாணவன் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் அம்மா பூங்கா அருகே வசித்து வருபவர் கணேசன். இவரது மகன் 14 வயது மகன் பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் பூங்கா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அருகில் இருந்த தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் விழுந்து விட்டது.

இதையடுத்து பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் பிரவீன்குமார் மோட்டார் அறையில் இருந்த வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த உயிரிழப்பு குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com