காஞ்சிபுரம்: பாம்பு கடித்து ஒரு வாரத்திற்குப் பின் குணமடைந்த சிறுவன்

காஞ்சிபுரம்: பாம்பு கடித்து ஒரு வாரத்திற்குப் பின் குணமடைந்த சிறுவன்

காஞ்சிபுரம்: பாம்பு கடித்து ஒரு வாரத்திற்குப் பின் குணமடைந்த சிறுவன்
Published on
விஷப் பாம்பு கடித்து மூன்று நாட்கள் உடலில் விஷத் தன்மையுடன் இருந்த சிறுவன் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் தர்சித் வழக்கம்போல் நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். அப்போது சிறுவனை விஷப் பாம்பு கடித்த நிலையில், அதனை அடித்துக் கொன்றுவிட்டு பெற்றோரிடம் சென்று தெரிவித்தார். பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மூன்று நாட்கள் கழித்தும் சிறுவனின் உடலில் விஷம் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து அவர் வீடு திரும்பினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com