\
தருமபுரி: உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுவன்

தருமபுரி: உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுவன்

தருமபுரி: உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுவன்
Published on: 

தருமபுரி மாவட்டத்தில் உண்டியல் பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சாலைகுள்ளாத்திரம் பட்டியை சேர்ந்த மணிமேகலை, பெருமாள் தம்பதியினர் மகன் மோனிஷ் ராகுல்(8). 2 ஆவது வகுப்பு படித்துவரும் ராகுல் ரிமோட் கார் வாங்க வேண்டும் என்பதற்காக   கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேமித்து வந்துள்ளான். முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிதி அளிப்பதை தொலைக்காட்சி வாயிலாக அறிந்த சிறுவன், தானும் நிதி வழங்கவேண்டும் என்று எண்ணியுள்ளான்.

இதற்காக உண்டியல் பணத்துடன் பிறந்தநாளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வாங்க வைத்திருந்த பணத்தை இணைத்து மொத்தம் ரூ.3500 யை பொன்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகனிடம் வழங்கினான். பணத்தை வாங்கிக்கொண்ட வட்டாட்சியர் சிறுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com