வீட்டின் கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் சடலம்

வீட்டின் கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் சடலம்
வீட்டின் கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் சடலம்

வீட்டின் கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூளைமேடு ஆத்திரேயபுரம் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சூளைமேடு காவல் நிலையத்திற்கு தகவல் புகார் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

இந்நிலையில், உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் கே.சி ரவீந்திரன் என்பதும், இவர், மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிப்புரிந்து வந்ததும் தெரியவந்தது.

ரவீந்திரனுக்கு இரு திருமணம் நடந்து விவாகரத்தான நிலையில் மூன்று வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடைசியாக கடந்த 17ஆம் தேதி ரவீந்திரனை அக்கம்பக்கத்தினர் பார்த்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ரவீந்திரன் மரணத்திற்கான காரணம் குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com