ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல்

ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல்
ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல்

உடல்நலக்குறைவால் இறந்த பெண்ணின் உடல் கொரோனா விதிகளின்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 68 வயதுள்ள பெண், உடல்நலக்குறைவால் சத்தியமங்கலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரு தினங்களுக்கு முன்பு அவர் சளி, காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா மூச்சுதிணறல் காணரமாக அவதிப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை கொரோனோ அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொரோனா வார்டு அல்லாத தனிவார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரானாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததால் அவரது உடல் பல அடுக்கு பாதுகாப்பு உடைகளால் கட்டப்பட்டு கிருமி நாசினி தெளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த பெண்ணின் உடல் கோட்டூவீராம்பாளையம் ஈக்தா மைதானத்தில் உறவினர்கள் 8 பேர் மற்றும் வருவாய், நகராட்சி மற்றும் காவல்துறை என 12 பேர் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரானோ தாக்காத பாதுகாப்பு உடை அணிந்து உடல் அடக்கம் செய்யும் பணியை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 12 அடி ஆழத்தில் பிளீச்சிங் பவுடர் போட்டு உடல் அடக்கம் செய்து மேல்புறத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.

சாதாரண காய்ச்சலில் வரும் நோயாளிகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு முதலுதவி செய்யாமல் பெருந்துறை கொரானா மருத்துவமனை வார்டு அனுப்பி வைப்பதாக புகார் எழுந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com