\
ராயபுரம் மண்டலத்தின் சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக - அதிமுகவுக்கு பின்னடைவு!

ராயபுரம் மண்டலத்தின் சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக - அதிமுகவுக்கு பின்னடைவு!

ராயபுரம் மண்டலத்தின் சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக - அதிமுகவுக்கு பின்னடைவு!
Published on

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக்கத்தின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

இந்த வார்டுகளில் திமுகவுக்கு அடுத்தபடியாக சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது பாஜக. குறிப்பாக 54 ,55, 57 ,59 ஆகிய வார்டுகளில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com