"ஐயா, நான் ஒரு சக்கரை நோயாளி” - மன்னிப்புக் கடிதம் எழுதிய பாஜக நிர்வாகி (கட்டெறும்பு)! நடந்தது என்ன?

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக பாஜக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீவைகுண்டம் கட்டெறும்பு இசக்கி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பாஜக பிரமுகர் கட்டெறும்பு
பாஜக பிரமுகர் கட்டெறும்புFacebook

வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி யுவராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து சாதி மோதலையும், வன்முறையையும் தூண்டும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் கட்டெறும்பு என்ற பெயரில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அந்த பதிவில் “ஒரு யுவராஜ் உள்ளவச்சிட்டு நூறு கோகுல்ராஜ் கொக்கரிச்சாலும் ஆயிரம் யுவராஜ் வெளியே இருக்கோம்” என்று பதிவிடப்பட்டிருந்ததாக வலுவான எதிர்ப்பும் புகாரும் எழுந்தது.

பாஜக பிரமுகர் கட்டெறும்பு
பாஜக பிரமுகர் கட்டெறும்புFacebook

இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதின் பேரில், ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் பதிவு செய்த திருச்செந்தூரை சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இசக்கி என்ற இசக்கிமுத்து என்பவரது பெயரில் வழக்கு பதியப்பட்டது.

4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

வழக்கின் பேரில் ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மற்றும் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சமூக அமைதிக்கு குந்தகம், வன்முறை தூண்டும் விதத்தில் செயல்பட்டது முதலிய 4 பிரிவின் கீழ் இசக்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு பாஜக பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கியை கைது செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

பாஜக பிரமுகர் கட்டெறும்பு
பாஜக பிரமுகர் கட்டெறும்புFacebook

வழக்கை விசாரித்த ஶ்ரீவைகுண்டம் நீதிமன்ற நீதிபதி மகாராஜன், 15 நாட்களுக்கு தினமும் ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் கட்டறெப்பு என்ற இசக்கியை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

உடல்நல பிரச்சனை இருப்பதாக மன்னிப்பு கடிதம்!

உடல்நல பிரச்சனை இருப்பதாக தெரிவித்து மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கும் கட்டெறும்பு என்ற இசக்கி, அதில் “கடந்த 2ஆம் தேதி சமூக வலைதளத்தில் சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் விதத்திலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் கட்டெறும்பு என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன். அதற்காக 3ஆம் தேதி என்மீதுவ் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் என் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். நான் தற்போது என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன்.

பாஜக பிரமுகர் கட்டெறும்பு
பாஜக பிரமுகர் கட்டெறும்புFacebook

எனக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் விறை வீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் சர்க்கரை நோயாளியான எனக்கு “டயாலசிஸ்” செய்துவருவதால் என் உடல்நிலையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்குமாறு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மன்னிப்புகேட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com