தமிழகத்தைப் போல கர்நாடகத்திலும் மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தைப் போல கர்நாடகத்திலும் மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தைப் போல கர்நாடகத்திலும் மசோதா நிறைவேற்றம்
Published on

தமிழகத்துக்கு ஜல்லிக்கட்டு போல கர்நாடகாவின் விளையாட்டான கம்பலாவுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை போன்று சேற்றில் எருது மாடுகளை கட்டி போட்டி நடத்துவதுதான் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பலா போட்டியாகும்.

ஜல்லிக்கட்டு போலவே கம்பலா போட்டியையும் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்து இருந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழகம் முழுவதும் எழுந்த போராட்டத்தை போன்று கர்நாடகாவில் கம்பலா போட்டி நடத்த அம்மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி நிரந்தரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதை போன்று கம்பலா போட்டிக்கான மசோதா கர்நாடகா சட்டப் பேரவையில் நிறைவேறி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com