சென்னை: சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக் தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை: சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக் தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை: சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக் தீப்பிடித்ததால் பரபரப்பு
Published on

சென்னை அபிராமபுரத்தில் பழுதுபார்க்க கொண்டு சென்ற பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் அருண் ராமலிங்கம் (24). இவர் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தியாகராய நகரில் இருந்து பழுது பார்ப்பதற்காக பல்சர் பைக்கை ஓட்டிக்கொண்டு இரவு 8:15 மணியளவில்  அபிராமபுரம் பகுதியில் உள்ள ரெயீன் டிரீ ஹோட்டல் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து புகை வர ஆரம்பித்துள்ளது.

சுதாரித்துக்கொண்ட மெக்கானிக் அருண் ராமலிங்கம், தான் ஓட்டிக் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தும் பொழுது திடீரென தீப்பற்றியது. பின்னர் அருண் ராமலிங்கம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டார். இருந்தும் தீ இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென பரவியது. அப்பொழுது தீயை அணைக்க முற்பட்ட மெக்கானிக் அருண் ராமலிங்கத்திற்கு கைகளில் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தைவெளி தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில் மர்மப் பொருள் இருப்பதாக புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com