\
வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான தடை இன்று முதல் அமலானது

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான தடை இன்று முதல் அமலானது

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான தடை இன்று முதல் அமலானது
Published on

வார இறுதி நாட்களில் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான தடை இன்று முதல் அமலாகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமையான இன்று, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் இந்தக் கட்டுப்பாடு தொடரும். வாரத்தில் மற்ற 4 தினங்களாக திங்கள் முதல் வியாழன் வரை, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com