அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – டிடிவி.தினகரன்

அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – டிடிவி.தினகரன்
அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – டிடிவி.தினகரன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது என் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் பேட்டியளித்தார்.

சட்டப் பேரவையில் எதையும் முடிவு செய்கிற அதிகாரம் பேரவைத் தலைவருக்குத்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும் நிலையில், நாற்காலிக்காக போராட்டம் நடத்துவது வருத்தமளிக்கிறது.

தூத்துக்குடி சம்பவம் நிகழ்ந்தபோது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக இருந்தார். நிச்சயமாக அவர் மீதுதான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு காரணமானவர்கள் முதல்வராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீதிபதியின் அறிக்கையும் அதைத்தான் சொல்கிறது. எனவேச தமிழ்நாடு அரசும் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதி தயாரித்த அறிக்கை போல உள்ளது. உண்மை என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பார்ப்போம். அரசியல் ரீதியாகத்தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர். நீதிமன்றத்தில் இந்த ஆணைய அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். மருத்துவர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. இதை சிபிஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும் என்றார் தினகரன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com