ஆம்புலன்ஸ் வாகனம் வராததால் பறிபோன உயிர் !

ஆம்புலன்ஸ் வாகனம் வராததால் பறிபோன உயிர் !

ஆம்புலன்ஸ் வாகனம் வராததால் பறிபோன உயிர் !
Published on

ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கியவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் உப்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரும் ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கோப்பேரி மடம் பகுதியில் அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆனந்த் முதலுதவிக்காக தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com