மின் உற்பத்தியை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

மின் உற்பத்தியை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

மின் உற்பத்தியை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
Published on
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுவது தொடர்பாகவும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துக்கும் இடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் செலவை குறைப்பதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டு வருகிறது. அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபுசாரா எரிசக்தி துறையில் திறன்படைத்த நிறுவனங்கள் கையாள்கிற உத்தியை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும். மேலும், சந்தை ஆய்வு, ஒப்பந்தபுள்ளிகள் மேலாண்மை மற்றும் அமலாக்கம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கும். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com