புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை நிறைவு.. அதிகாலை முதலே மீன் வாங்க குவிந்த மக்கள்!

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க கடந்த வாரத்தை காட்டிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காசிமேடு
காசிமேடு PT

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க கடந்த வாரத்தை காட்டிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருந்த போதும் புரட்டாசி மாதம் இன்னும் முழுமையாக நிறைவடையாததால் மீன்களின்‌ விலை அதிகரிக்கவில்லை என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்து காணப்படுகின்றது.

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து போதுமான அளவில் உள்ளதால் மீன்களின் விலை என்பது சற்று இறக்கத்துடன் விற்கப்படுகிறது.

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் இன்றைய தினநிலவரப்படி

1 கிலோவிற்கு விலைப்பட்டியல் என்னவென்றால்,

வஞ்சிரம் 700-ரூ, பெரிய சங்கரா 200-ரூ, சின்ன சங்கரா 150-ரூ, பெரிய இறால் 650-ரூ, சிறிய இறால் 350-ரூ, சைனிங் வவ்வால் 1300-ரூ, சுரா 400-ரூ, பாரை 320-ரூ, நெத்திலி 200-ரூ, சீலா 300-ரூ, கொடுவா 550-ரூ, பெரிய கடம்பா 250-ரூ, சிறிய கடம்பா 150-ரூ, நண்டு 200-ரூ, கானங்கத்தை 150-ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com